ஒரு கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கொழும்பு கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைத்திருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மற்றும் சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
11 பார்சல்களில் இந்த போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நுகேகொட, பாணந்துறை, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள போலி முகவரிகளுக்கு இங்கிலாந்து மற்றும் ஜேர்மனியில் இருந்து இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பார்சல்களில் 1,055 போதை மாத்திரைகள், 318 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 15 கஞ்சா விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் தொகையை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.