Friday, May 2, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏழு பேரின் உயிரை பறித்த சமய சொற்பொழிவு

ஏழு பேரின் உயிரை பறித்த சமய சொற்பொழிவு

தற்கொலை செய்து கொண்ட ருவன் குமார பிரசன்ன குணரத்னவின் விரிவுரைகள் மற்றும் அந்த விரிவுரைகளில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் தற்கொலைக்கு பயன்படுத்திய சயனைட் என சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விரிவுரைகளில் கலந்து கொண்ட இளம் பெண் மற்றும் இளைஞன் உட்பட ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

முகநூல், சமூக ஊடகங்கள், விகாரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமய சொற்பொழிவுகளை நிகழ்த்திய ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபர் மற்றும் அவரது போதனைகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்ன, அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் மற்றும் அவரது விரிவுரைகளில் கலந்துகொண்ட இரண்டு சீடர்களும் தற்கொலை செய்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles