06 மாவட்டங்களின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (04) பிற்பகல் 3.30 மணி வரை செல்லுபடியாகும்.