Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடமேல் மாகாண ஆசிரியர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்த தடை

வடமேல் மாகாண ஆசிரியர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்த தடை

வடமேற்கு மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் மேலதிக கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதை முற்றாக தடை செய்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை 01.01.2024 அன்று நடைமுறைப்படுத்தப்படும் என வடமேல் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் வடமேல் மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர் திருமதி நயனா காரியவசம் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை வடமேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு அதிபர்களே பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles