டெங்கு நுளம்புகளை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய மட்டத் தொடர் வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) முதல் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள இந்த விசேட தேசிய மட்டத் தொடர் வேலைத்திட்டங்கள் டெங்கு அபாயப் பகுதிகளை மையமாகக் கொண்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் இலங்கை பொலிஸ், ஆயுதப்படை, சிவில் பாதுகாப்புப் படை, டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் சமூக சுகாதார குழுக்களின் கிராமிய குழு உறுப்பினர்கள், கிராமத்தின் மையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.