Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் கைது

சுமார் 27 இலட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபா (2,712,000) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமானின் மஸ்கட்டில் இருந்து OV-437 ஓமன் எயார்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை 04.51 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வர்த்தகர் கொண்டு வந்த 03 சூட்கேஸ்களில் 27,120 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மான்செஸ்டர்’ சிகரெட்டுகள் அடங்கிய பக்கெட்டுகள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இந்த வர்த்தகரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles