கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.
இதன்படி 346,976 பரீட்சார்த்திகள் இன்றைய தினம் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,531 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.