ஈரானின் கர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதி அருகே இரண்டு குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று (03) இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 103 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் சந்தேகிக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.