2023 ஆம் ஆண்டில் இதுவரை 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மருந்து தரத் தோல்வியை கொண்ட ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த சுமார் 55 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் 40 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. ஏனையவை சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.
இந்தத் தரச் சோதனைகள் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட சில மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதுட்ன, ஏனையவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Flucloxacillin Cap இன் 35 தொகுதிகள் மே மாதத்தில் திரும்பப் பெறப்பட்டன.இது 2017 க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளாகும்.
இரத்மலானையில் அமைந்துள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டில் மருந்துகளின் தரப் பிரச்சினைகள் மற்றும் பல சிக்கல்கள் மற்றும் இறப்புகள் பதிவாகியுள்ளன.