Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயினுடன் ஐவர் கைது

ஹெரோயினுடன் ஐவர் கைது

பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால் 11,050 மில்லிகிராம் ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 63, 67, 57, 42 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும்இ அவர்கள் பதுளை நெலும்கம மற்றும் பஹல்கம பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நகரைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பதுளை அந்தெனிய பாலம் மற்றும் கலன் சந்திக்கு அருகில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடம் 5,310 மற்றும் 5,480 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பதுலுபிட்டி, கைலாகொட மற்றும் நெலும் கமடி ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 120, 50 மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles