Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்ஹமாஸின் துணை தலைவர் சலே மரணம்

ஹமாஸின் துணை தலைவர் சலே மரணம்

தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளது.

ஹமாஸின் இராணுவப் பிரிவை நிறுவியவர்களில் ஒருவரான அல்-அரூரி ஹமாஸ் பொலிட்பீரோவின் மூத்த அதிகாரி மற்றும் அதன் இராணுவ விவகாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்டவர்.

இவர் முன்பு மேற்குக் கரையில் குழுவின் முன்னிலையில் தலைமை வகித்தார்.

ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைவர்களான சமீர் ஃபிண்டி அபு அமீர் மற்றும் அஸ்ஸாம் அல்-அக்ரா அபு அம்மார் ஆகியோரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

லெபனான் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், இந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர்ப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து இஸ்ரேலிய டிரோன் ஒன்று வெடித்து சிதறியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles