தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் 3% ஆல் அதிகரித்துள்ளது.
தொலைபேசி சேவைகளுக்கான மொத்த வரி விகிதம் 38.4% வீதத்திலிருந்து 42% ஆக அதிகரித்துள்ளதாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தெரிவித்தார்.
இணைய சேவைக் கட்டணங்களுக்கான புதிய VAT திருத்தத்திற்குப் பிறகு 20.3 முதல் 23.5 வரை இருக்கும் என்றும், இந்த வரிகளில் ஓய்வு வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரி ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VAT வரி அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.