செரண்டிப் கிளியரிங் ஹவுஸிலிருந்து 6 கோடியே பதின்மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபா (61,360,000) மதிப்பிலான ஹஷிஸ் போதைப்பொருளை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு கைப்பற்றியுள்ளது.
இத்தாலியில் இருந்து ஹோமாகம பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட பார்சலில் இருந்தே இந்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது உணவு அடங்கிய பரிசுப் பொதி எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இந்த பார்சல் நேற்று (02) சீதுவ செரண்டிப் நிறுவனத்திற்கு வான்வழி தபால் மூலம் கிடைத்துள்ளதுடன், சுங்க அதிகாரிகள் 4 கிலோ 919 கிராம் எடையுள்ள ஹஷிஸ் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
போதைப்பொருள் அடங்கிய பார்சலை பெற்றுக்கொள்ள வந்த முகவர் முன்னிலையில் சோதனையிடப்பட்டு முகவரும் கைது செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் குறித்த முகவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு விமான அஞ்சல் சேவைகள் மூலம் இலங்கைக்குள் விஷமருந்துகளை கொண்டு வர 8 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அந்த சந்தர்ப்பங்களில் 61 கிலோ 700 கிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.