வெலிகமவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் உபுல் சமிந்தவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகமவில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சார்ஜன்ட் உயிரிழந்ததுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்தார்.
பணியின் போது அதிகாரி இறந்ததால் பதவி உயர்வு அடிப்படையில் டிசம்பர் 31 ஆம் திகதி முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.