மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக அதன் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.