மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தம்பராவ ஓயாவின் நீர்மட்டம் உயர்வினால் மஹியங்கனை தபால் 20ல் இருந்து ரோஹண சந்திக்கு செல்லும் பக்க வீதியிலுள்ள பாலமொன்று நேற்று (01) இரவு முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது.
இது தவிர உல்ஹிட்டிய மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இன்னும் சிறிய வெள்ள நிலைமை காணப்படுவதாகவும் இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் சிறிய வீடு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மஹியங்கனை பிரதேச செயலாளர் அலுவலகம், அனைத்து பொலிஸ் நிலையங்கள், நீர்ப்பாசன அலுவலகம், மகாவலி அதிகாரசபை மற்றும் ஏனைய தரப்பினர் அப்பிரதேசத்தின் அன்றாட நடவடிக்கைகளை வழமையாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.