மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
நேற்று (01) பிற்பகல் நீர் மட்டம் குறைந்ததன் காரணமாக கல்வெல்ல பகுதியிலிருந்து அந்த வீதியில் லொறிகள் மற்றும் பேருந்துகள் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், மகாவலியில் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக இன்று (02) மீண்டும் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.