ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது பிள்யையை மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிச் சென்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் இன்று (02) இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருக்வத்தை, பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் உள் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிராம் 250 மில்லிகிராம் போதைப்பொருள் மற்றும் 150,000 ரூபா ரொக்க பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நோய்வாய்ப்பட்ட பிள்ளையை பயன்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட எட்டு கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட இங்கிரிய, உருகல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 2 கிராம் 180 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.