Tuesday, June 23, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

ரயில், முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் உட்பட போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த சட்டத்தை மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அமைச்சரவை பத்திரம் ஒன்றை நேற்று (01) வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles