ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தின் போது விமானத்திலிருந்த 379 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.