Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

ஜனவரி 21 ஆம் திகதிக்கு முன்னர் 50,000 மெற்றிக் டன் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வது கடினமாக இருந்த போதிலும் குறிப்பிட்ட அளவு கீரி சம்பா அரிசியை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிப்பதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 235 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று (02) அல்லது நாளை (03) கீரி சம்பா அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles