2024 ஆம் ஆண்டு புத்தாண்டு ஆரம்பமாகும் தருணத்தில் குழந்தையொன்று பிறந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது.
2024 புத்தாண்டு விடியலுடன் பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவமனையில் இந்த குழந்தை பிறந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குழந்தைக்கு Jayden Riley என பெயரிடப்பட்டுள்ளதுடன், குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரோனா லின் கன்செப்சன் என்ற 23 வயதுடைய பெண்ணே இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.



