டென்மார்க் ராணி மார்க்ரேட் II பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
புத்தாண்டில் இடம்பெற்ற தொலைக்காட்சி உரையின் போது அவர் இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் டென்மார்க் ராணியாக பதவியேற்று 52 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனவரி 14 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பதவி விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
83 வயதான ராணி மார்கரெட் II, 1972 ஆம் ஆண்டில் தனது தந்தை ஃபிரடெரிக் IV இன் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறினார்.
2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் அவரது மோசமான உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ராணி மார்க்ரேட் II தனது பதவி விலகலை அறிவித்த பிறகு, பல ஆண்டுகளாக டேனிஷ் பொதுமக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாகக் கூறினார்.
தமக்குப் பிறகு தமது மூத்த மகன் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் அரியணையில் அமர்வார் என அவர் அறிவித்தார்.
