Monday, May 4, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகரையோர ரயில் சேவையின் பயண அட்டவணையில் மாற்றம்

கரையோர ரயில் சேவையின் பயண அட்டவணையில் மாற்றம்

கரையோர ரயில் மார்க்கத்தின் பயண அட்டவணையில் இன்று முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ருஹுணு குமாரி கடுகதி ரயில், இன்று முதல் பெலியத்த தொடருந்து நிலையத்தில் இருந்து காலை 5.25க்கு பயணிக்கும்.

அத்துடன், வார நாட்களில் மட்டும் இயக்கப்பட்ட சாகரிகா கடுகதி ரயிலை சனிக்கிழமைகளிலும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் இரவு 8.35க்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை முன்னெடுக்கப்படும் ரயில் சேவை இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மருதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்று முதல் பிற்பகல் 1.55க்கு பயணத்தை ஆரம்பிக்குமென தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles