இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி,
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 366 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் 41 ரூபாவால் அதிகரிப்பு. அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் 11 ரூபாவால் குறைந்து அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.
இந்த விலைகள் இன்று (01) முதல் அமுலுக்கு வருகின்றன.
