பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என்றார.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வெட் வரி 18 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.