மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை மற்றும் ஹாலி எல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி, இன்று காலை 8.30க்கு புறப்பட்ட ரயில் ஒன்றே, இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தடம்புரண்டுள்ள ரயிலை மீள தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.