Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதுக்குடியிருப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

புதுக்குடியிருப்பு – இடைக்கட்டு பகுதியில் இன்று புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 810 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (29) அதிகாலை 3 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 14 பரல், 810 லீற்றர் கோடா மற்றும் 60 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடைக்கட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles