பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (29) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பிலும் உத்தேச கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில், சூரிய சக்தி, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறையில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், திருகோணமலையில் ரயில்வே தொடர்பான கூட்டுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.