கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற மரங்கள் எதிர்காலத்தில் வெட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை தாவரவியல் பூங்கா மற்றும் கிளை நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் சுமார் 200 மரங்களின் கிளைகளை சமப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.