Monday, January 19, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சி

கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சி

பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு நத்தார் பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை 25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கப்பெறாத பட்சத்தில், உள்நாட்டு முட்டைகளை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்து தயாரிக்கப்படும் கேக்கின் விலையை குறைப்பது சாத்தியமற்றது எனவும் அகில இலங்கை வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles