Friday, April 4, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் பன்றி காய்ச்சல் தொற்று

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் பன்றி காய்ச்சல் தொற்று

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி தொகையை அழிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று காலை நடவடிக்கை எடுத்திருந்தது.

பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியின்றி சீனாவில் இருந்து இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் என்ற தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த இறைச்சி தொகை, சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles