Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு சிறுவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் கைது

இரு சிறுவர்களுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் கைது

எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் 13 வயதுடைய சிறுவர்கள் இருவருடன் தங்கியிருந்த 51 வயதுடைய ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் பயிற்சிக்காக தனது பாடசாலையில் கல்வி கற்கும் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயது சிறுவர்களை அழைத்துச் செல்வதாக குறித்த ஆசிரியர் பெற்றோரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பாததால், குறித்த ஆசிரியர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில்சந்தேக நபரான ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles