மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தனது மத்திய குழுவும் ஏகமனதாக இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.