மனைவியை தாக்கி தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிளின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு பின்னரே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.