கொழும்பு மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பிரதான நபரான ‘ குடு ரொஷான் ‘ மற்றும் மேலும் சிலர் வரக்காபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிசெம்பர் 26ஆம் திகதி இரவு வரக்காபொலவிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போது ‘குடு ரொஷான்’மற்றும் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பத்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் எட்டு சிறுவர்கள் அடங்குவதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ‘குடு ரொஷான்’ என்பவருக்கு சொந்தமான ஜா -எலயில் உள்ள வீடு, காணி, வாகனம் மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.