அடுத்த வருடம் எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஜனவரி முதலாம் திகதி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான ஏயுவு அமுல்படுத்தப்படும் போது, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி அதிலிருந்து நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், எரிபொருளுக்கான 18 சதவீத வெட் வரியை நடைமுறைப்படுத்தும்போது, அந்த வரியிலிருந்து 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.
மேலும், எரிவாயுவுக்கான 18 சதவீத வெட் வரியை அமுல்படுத்தும்போது, அந்த வரியில் இருந்து 2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும்.