தட்டம்மை நோய்க்கு தேவையான தடுப்பூசி செலுத்துதல் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்நோய் அதிகமாக காணப்படும் 09 மாகாணங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு தட்டம்மை ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சான்றளிக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள 06 முதல் 15 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனவரி 6 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த தடுப்பூசிகள் அந்தந்த மாவட்ட மக்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள முடியும்.