வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் முதல் வடக்கு ரயில் மார்க்கம் மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான பகுதி 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி ஆணையாளர் இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும்.