வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி மற்றும் 4,500 ரவைகள் இன்றையதினம் (27) மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை அவதானித்துள்ளார்.
அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து, முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்து குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.
T-56 வகை துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4500 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது.