Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் சீருடை தைப்பவர் ஹெரோயினுடன் கைது

பொலிஸ் சீருடை தைப்பவர் ஹெரோயினுடன் கைது

களுத்துறை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சீருடை தைக்கும் தையல்காரர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக களுத்துறை பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர் களுத்துறை வடக்கில் தையல் கடை நடத்தி வருபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலித்தீன் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7,880 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை களுத்துறை, பணப்பிட்டிப்பாறை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் அணிந்திருந்த ஆடைகளில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles