2024 புத்தாண்டு தினத்தன்று சார்ஜாவில் பட்டாசு வெடிக்க மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முடிவு இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், அனைத்து நிறுவனங்களும் தனிநபர்களும் ஒத்துழைக்குமாறும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரின் விளைவாக, காசாவில் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே இறந்துள்ளனர்.
அவர்களில் எழுபது சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது