Sunday, May 4, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் குடிசைகளில் வசிப்போருக்கு வீடுகள்

கொழும்பில் குடிசைகளில் வசிப்போருக்கு வீடுகள்

கொழும்பில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகளை வழங்கும் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள 26 தோட்டங்களில் 61,000க்கும் அதிகமான மக்கள் வசிப்பதாக வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா குறிப்பிட்டார்.

அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான புதிய பிரேரணை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், இதன் கீழ் தோட்டங்களில் வசிப்போருக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் வீடுகள் வழங்கப்படுகின்றன.

மக்களை குடியமர்த்திய பின்னர், தோட்டங்களில் எஞ்சியுள்ள இடங்கள் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

திட்டத்துக்காக முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை ஏற்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles