கதிர்காமம் ஆலயத்தின் தங்க தகடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதான பூசகரான சோமிபால ரத்நாயக்க இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலா 5 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 முதல் 12 மணிக்குள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.