அரச உத்தியோகத்தர்களின் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக விடுமுறை நாட்களைக் குறைப்பதற்கு தமது சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக அரச மாகாண அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில பண்டார தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரச உத்தியோகத்தர்களின் தற்போதைய விடுமுறையை வருடத்திற்கு 25 ஆகக் குறைக்கும் யோசனையொன்று துறைசார் கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை 10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.