டெங்கு நோய் பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, உலகில் அதிக டெங்கு நோய் பரவும் 30 நாடுகளில் இலங்கையும் உள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, உலகில் அதிக டெங்கு தொற்று உள்ள 30 நாடுகளில் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.
2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தில் இருந்து 5.2 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.