Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்அசாம் மாநிலம் தேஸ்பூரில் நிலநடுக்கம்

அசாம் மாநிலம் தேஸ்பூரில் நிலநடுக்கம்

அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று (27) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று அதிகாலை 5:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தேஸ்பூருக்கு கிழக்கே 42 கிமீ தொலைவில் 20 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் தேஸ்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles