Friday, April 4, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விற்பனையில் கட்டுப்பாடு

முட்டை விற்பனையில் கட்டுப்பாடு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வழங்க சதொச தீர்மானித்துள்ளது.

சதொச நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை விநியோகிப்பதுடன், அவற்றை நிர்வகித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முட்டைகளை வழங்கும் நோக்கில் இந்த தடை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ளூர் முட்டை விலை வரம்பற்ற உயர்வால், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கேள்வி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான காலப்பகுதியில் சதொச நிறுவனத்திடம் இருந்து சலுகை விலையில் முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் சதொச கிளைகளுக்கு முன்பாக வரிசையில் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாடிக்கையாளருக்கு 35 ரூபா என்ற விலையில் ஒரு முட்டைக்காக 30 முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அடுத்த சில நாட்களில் அந்த தொகை மட்டுப்படுத்தப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles