Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள்

பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள்

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் (H.E) Tareq Md Ariful Islam ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 24 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளார்.

குறித்த மருந்துப் பொருட்கள் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவிடம் நேற்று (21) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் பங்களாதேஷ் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இரு நாட்டு சுகாதார அமைச்சர்கள் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

24 வகையான அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு நாட்டின் 3 மாத மருந்து தேவைக்கு போதுமானது மற்றும் இந்த நன்கொடை பங்களாதேஷின் மாநில மருந்து பொறிமுறையான Essential Drugs Company Limited உடன் ஒருங்கிணைந்து செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles