Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு வந்த தொலைப்பேசிவழி கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியதன் பின்னர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அழைப்பதாக தெரிவித்த ஒருவர், பாதாள உலகத்தலைவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அஜித் என்ற நபர் தமக்கு தகவல் வழங்கியதாகவும், அதன்படி பாதாள உலக்குழு தலைவர்கள் அனைவரையும் கொல்வதாக அமைச்சர் குறிப்பிட்டதாகவும், அதனை எவ்வாறு செய்ய முடியும் எனவும், பழைய நடப்புகளை மறக்க வேண்டாம் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

மேலும் 7 பௌர்ணமி தினங்களுக்குள் “அமைச்சர் குறித்து முடிப்பதாகவும்” தொலைப்பேசியில் அழைத்த நபர் எச்சரித்துள்ளார்.

எனினும் 3 பௌர்ணமி தினங்களுக்குள் தாம் எடுத்த பணிகளை முடிப்பதாக அமைச்சர் பதிலளித்ததாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles